இன்று (19.06.21) காலை மத்திய இரணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதி கட்டி முடிக்க தேவையான இராணுவத்திற்கு சொந்தமான இடத்தை ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொண்டார்.

இராணுவத் துறை அமைச்சர் அவர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்து உள்ளார்.