Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அண்ணா பிறந்தநாள் அன்று இஸ்லாமிய சிறை வாசிகளை விடுவிக்க காயல் அப்பாஸ் வேண்டுகோள்.

0

*பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் : முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !*

அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

ஆண்டு தோறும் செப்டம்பர் 15ம் தேதி அன்று அறிஞர் அண்ணா பிறந்த நாளில் பத்தாண்டுக்கும் மேலாக உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்து உள்ளது.

அரசியல் சாசன பிரிவு 161 படி மாநில அமைச்சரவை முடிவு செய்து சிறைவாசிகளை விடுதலை செய்வதற்க்காக மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்து அதை அவர் ஏற்று கொண்டு பரிந்துரைக்கபட்ட சிறைவாசிகள் விடுதலை செய்ய படுகிறார்கள்.

இஸ்லாமிய சிறைவாசிகள் மருத்துவ சிகிச்சை பெற ஜாமினில் செல்ல கூட அனுமதிக்க படுவதில்லை. சிறை விதிகளின் படி சிறை வாசிகளுக்கு வழங்கும் பரோல் விடுவிடுப்பு கூட இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மறுக்க படுகிறது . இதனால் இஸ்லாமிய சிறைவாசிகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்க பட்டு ஒரு சிலர் உயிர் இழந்துள்ளனர்.

எனவே மருத்துவ சிகிச்சை பெறவதற்கு ஜாமினில் செல்ல தாமதமின்றி அனுமதிக்க வேண்டும். சிறை விதிகளின் படி சிறைவாசிகளின் பரோல் விடுவிடுப்பை இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு தாமதிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .

எனவே : தமிழக சிறையில் பத்தாண்டுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை கருனையின் அடிப்படையில் வருகிற செப்டம்பர் 15ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய மாண்பு மிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு இக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.