அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பின்படி பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயுவை விலை உயர்வை கண்டித்து இன்று 11.6.2021 காலை திருச்சியில் தலைமை அஞ்சல் அலுவலகம் அமைந்துள்ள ரோட்டில் பெட்ரோல் பங்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமையிலும் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கோவிந்தராஜன் முன்னிலையிலும் நடைபெற்றது.
மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் பென்னட் அந்தோணிராஜ், வக்கீல் சரவணன், முன்னாள் மேயர் சுஜாதா, மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்டரிக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரெக்ஸ் , மாவட்ட முரளி, மாநகர செயலாளர் அண்ணாசிலை விக்டர், பெரியமிளகுபாறை சோமசுந்தரம் மற்றும் கோட்டத் தலைவர்கள் இளைய காங்கிரஸ் விக்னேஷ் பஞ்சாயத்து ராஜ் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பொதுச்செயலாளர் மணிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்