சென்னை வளசரவாக்கத்தில் அன்பும் ஆக்கமும் அறக்கட்டளையின் சார்பில் காவல் உதவி ஆணையாளர் மகிமை வீரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அன்பும் ஆக்கமும் அறக்கட்டளை சென்னை வளசரவாக்கத்தில் அமைந்துள்ளது.
இதன் நிறுவனர் V. வேல் நாகராஜ், செயலாளர் V. செந்தில்குமார், பொருளாளர் K. செந்தில்குமார், இந்த அறக்கட்டளை சென்னை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இந்தப் கொரானா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சாலை ஓரங்களில் வசிப்போருக்கு பொட்டலங்களாக மதிய உணவு வழங்கி வருகின்றனர்,
அதுமட்டுமின்றி கொரோனா காலம் இல்லாமல் மற்ற நாட்களில் சுமார் 50 முதல் 100 பொட்டலங்களை அறக்கட்டளை நிர்வாகிகள் கொடுத்து வந்தனர்.
இந்த அறக்கட்டளையின் அன்பான ஆக்கப் பணிகள் – உணவின்றி பசித்திருபோருக்கு இலவச உணவு வழங்குதல், நம் உயிர் காக்க உதவிவரும் துப்புரவு பணியாளர்களுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல், நம்மை காக்கும் காவல்துறை அன்பு நண்பர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்குதல், இயலாதவர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்கான உயிர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல்,
யாசகம் இல்லா தமிழகம் உருவாக்க சுய சம்பாத்திய தொழில் உருவாக்கித் தருவது (உதாரணம் எடை எந்திரம், பூ, பழம், காய் வியாபாரம், பேனா, பென்சில், பின், ரப்பர் பேண்ட் போன்றவை வாங்கி கொடுத்து அவர்களின் சம்பாத்தியத்திற்க்கு உதவுவது) இந்த அறக்கட்டளையின் சிறந்த நோக்கமாகும்.
தானத்தில் சிறந்தது அன்னதானம் அந்த அன்னதானத்தை சிறப்பாக நடத்தும் இந்த அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்