அரியானாவில் பா.ஜ.க.வை சேர்ந்த மூத்த பெண் தலைவர் கமலா வர்மா. இவர் அரியானா அரசில் 3 முறை மந்திரியாக பதவி வகித்த அனுபவமுள்ளவர்.
அவர், தனது பதவி காலத்தில் சுகாதாரம், விளையாட்டு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் பிற முக்கிய துறைகளிலும் பொறுப்புகள் வகித்துள்ளார்.
கடந்த 1975ம் ஆண்டு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது, கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவரது இறுதி சடங்குகள் இன்று காலை 11.30 மணியளவில் யமுனா காட் பகுதியில் நடைபெறும்.