Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் வெளிநாடு வாழ் தமிழர்கள் சார்பில் ஏழை எளியோருக்கு 18 வது நாளாக சிக்கனுடன் சாப்பாடு.

0

திருச்சியில் வெளிநாடுவாழ் தமிழர்கள் சார்பில் 18வது நாளாக தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இங்கிலாந்து மாகாணத்தில் வாழும் லிவர்பூல் தமிழ் மக்கள் கல்விக்கூடம் மற்றும் இலங்கை தமிழர்கள் சார்பில் திருச்சியில் கொரோனா ஊரடங்கால் பாதித்த ஏழை எளிய பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உணவுகளை வழங்க சசிகுமார் நண்பர்கள், வெளிநாட்டில் பணிபுரியும் அனைத்து நண்பர்கள், தமிழ் மக்கள் நண்பர்கள் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். திருச்சி டிவிஎஸ் டோல்கேட், உலக நாதபுரம் நண்பர்கள் மூலம் உணவு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இவ் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் சசிகுமார், ஹரிஹரன், டோல்கேட் ரஜினி சரவணன், தோழர் சுரேஷ், ஜெகநாதன், செந்தில், சுந்தர், பிரபா, மணி, மனோஜ், அசோக், சிவா மற்றும் உலகநாதபுரம் நண்பர்கள் இணைந்து இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று 18ஆம் நாளாக காலிஃப்ளவர், பச்சைப்பட்டாணி குஸ்கா, சிக்கன் கிரேவி, தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்பட்டது.

இதன்மூலம் நூற்றுக்கணக்கானோர் பயனடைந்தனர். ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும்
இவர்களின் சேவையை இப்பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.