மராட்டிய மாநிலம் மும்பை மலாட் பகுதியை சேர்ந்தவர் கரண் குப்தா ( வயது 32) மெக்கானிக்கல் என்ஜினியர். இவர் திருமண தகவல் இணையதளங்களில் பலவேறு பெயர்கள் மற்றும் முகவரிகளில் பதிவு செய்து பெரிய நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறி பெண்களிடம் தொடர்பை ஏற்படுத்தி கொள்வார்.
தொடர்ந்து பப், உணவகம் அல்லது மாலில் சந்தித்து பேசுவார். பின்னர் அவர்களை தனிமையில் சந்திக்க அழைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளார்.
இது தொடர்பாக கிடைத்த புகாரின் பேரில் புனே போலீசார் அவர் கைது செய்து உள்ளனர்.
இது குறித்து போலீஸ் துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ் மெங்கடே கூறியதாவது:-
“குற்றம் சாட்டப்பட்டவர் ஒவ்வொரு குற்றத்திற்கும் வேறு மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்ளார்.
அவர் ஒவ்வொரு முறையும் தனது சிம்மை மாற்றி உள்ளார். ஓலா அல்லது உபெரைப் டாக்சிகளை முன்பதிவு செய்ய, அவர் வெவ்வேறு சிம் கார்டுகளைப் பயன்படுத்தி உள்ளார். கம்யூட்டர் தொழில் நுட்பத்தில் கைதேர்ந்தவர்.
இப்போது வரை, அவர் 12 பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை செய்ததாக எங்களிடம் புகார்கள் உள்ளது, ஆனால் இன்னும் பலரும் இருப்பதாகத் தெரிகிறது.
ஆனால் யாரும் புகார் அளிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்” என்று கூறினார்.