அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் கல்வி உரிமை ஆர்வலருமான மலாலா யூசுப்சாய் .
பயங்கரவாதிகளின் மனித உரிமை மீறலுக்கு எதிராகவும் பெண் கல்விக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வந்த மலாலா யூசுப்சாய் மீது கடந்த 2012-ம் ஆண்டு தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சிறுமி மலாலா, லண்டனில் உயர் சிகிச்சைக்கு பிறகு நலம் பெற்றார்.
பெண் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த மலாலா யூசுப்சாய்க்கு கடந்த 2014 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
17 வயதில் மலாலா இந்த விருதை பெற்றார்.
அண்மையில் மலாலா பிரிட்டன் பத்திரிகையான வோக் அட்டையில் மலாலா இடம் பெற்றார். அந்தப் படம் வைரலாகப் பரவியது.
அந்த இதழுக்கு அளித்த பேட்டியில் இதுவரை பேசாத தமது தனிப்பட்ட வாழ்க்கையின் பல கேள்விகளுக்கு மலாலா பதிலளித்துள்ளார்.
அதில் திருமணம் குறித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாழ்க்கையில் ஆண் துணை வேண்டுமானால் அதற்கு திருமண பேப்பர்களில் கையெழுத்துப் போட வேண்டிய அவசியமில்லை என்று மலாலா கூறியுள்ளார்.
மலாலாவின் கருத்து பொறுப்பற்றது என்று பாகிஸ்தானில் கடும் கண்டனம் வலுத்துள்ளது.