Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

0

உலக சுற்றுச் குழல் தினத்தை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்க சார்பில் மரக்கன்று நடும் விழா இன்று காலை 8.00 மணியளவில்

பொன்மலை ரயில்வே காலனி ”F” டைப் காலனி பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா , மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம் தலைமையில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் நீலமேகம் பேசியபோது :

அரசமரம், வேம்பு, புங்கன், போன்ற 15 வகை மரக்கன்றுகள் நடப்பட்டது.

அதில் : 2021 ஆம் ஆண்டு சுற்றுச் குழல் தினத்துக்கான கருப்பொருளாக ” சுற்றுச்சூழல் அமைப்பின் மறு சீரமைப்பு ” என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

உலக சுற்றுச் சூழல் தினத்தின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சுற்றுச் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தூண்டுகோலாக அமைவதும் தான்.
என்று பேசினார்.

இதனை தொடர்ந்து பிளாஸ்டிக்கை ஒழித்து, சுற்றுச் குழலை காப்போம் என்பதை செயல்படுத்தும் வகையில் உறுதி மொழி எடுக்கப்பட்டது.

நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் மகளிரணி என்.தரணி, உதயசந்திரன் , ரயில்வே ராமராஜ் , கார்த்திக், ஆர்.சுமன், ஆர்.சுதன், உ.ரதிஸ், மணி, மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.