தமிழக முதலமைச்சருக்கு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நன்றி !
பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில் மாணவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கியவாதிகள், இளைஞர்கள், பள்ளி சிறார்கள் என அனைவருக்கும் அறிவொளி அளிக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழும் ஆசியாவின் மிகப்பெரிய அதிநவீன சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை போன்று
இரண்டு லட்சம் சதுரடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைத்திட உத்தரவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு
தமிழகத்தின் எதிர்காலமான அனைத்து குழந்தைகளின் சார்பாக, மக்கள் பிரதிநிதி என்ற முறையிலும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்ற முறையிலும் கோடான கோடி நன்றிகளை சமர்ப்பிக்கின்றேன்.
என திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.