ஆந்திராவில் அடக்கம் செய்யப்பட்டதாக கருதப்பட்ட மூதாட்டி மீண்டும் வீட்டுக்கு வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி கிரிஜம்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டு விஜயவாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்.
இந்நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறி மருத்துமனை ஊழியர்கள் கொடுத்த சடலத்தை கல்லறைத் தோட்டத்தில் உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
கிரிஜம்மா இறப்புக்கு அவரது வீட்டில் கிறிஸ்தவ முறைப்படி பிரார்த்தனை நடத்தப்பட்டது.
அப்போது குணமடைந்து விட்டதாக கூறியபடியே கிரிஜம்மா திடீரென வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
இதனால் உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் உறைந்தனர்.
இதனிடையே கிரிஜம்மாவின் உடல் என்று கருதி புதைக்கப்பட்டது யார் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.