திருச்சி வரகனேரி அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இலவச அவசர ஊர்தி சேவை துவங்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் திருச்சியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கும் ஆதரவின்றி , தவிக்கும் ஏழை எளியோருக்கு உதவி வருகிறது,
அந்த வகையில் திருச்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கொரோனா தடுப்பு ஆலோசனை சேவை மையம் இயங்கி வருகிறது.
மேலும் இன்று (மே 29) வராகனேரி அருகே ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் அவசர ஊர்தி ஒன்று தயார் செய்யப்பட்டு இன்று வழங்கப்பட்டது.
முன்னதாக தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசல் அருகில் இலவச ரத்ததான முகாம் நடைபெற்றது