திருச்சி கோ – அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் இன்று பொதுமக்களுக்கு சித்த மருந்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.
அதன்பின்பு அவர் பேசிய போது :
திருச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் 30 படுக்கைகள் காலியாக உள்ளது.
70ஆக்சிஜன் படுக்கைகளும் காலியாக உள்ளது.
சமூக இடைவெளி மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் விரைவில் கொரோனா தொற்று குறையும்.
மாநகருக்கு தண்ணீர் வழங்கும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் பணிகளை ஆய்வு செய்ய இருக்கிறேன். குடிதண்ணீர் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அத்தனை வசதிகளும் செய்து வருகிறோம்.
தொடர்ந்து அரியமங்கலம் பகுதியில் குப்பை அகற்றும் பணியை பார்வையிட உள்ளோம்.
பாதாள சாக்கடை திட்டம் எங்கு இல்லையோ அங்கு விரைவில் செயல்படுத்த உள்ளோம். இப்போது நடந்து கொண்டிருக்க பணிகளை விரைவுபடுத்த உள்ளோம்.
மழை காலத்திற்கு முன்னர் அனைத்து பணிகளும் விரைந்து முடித்து உய்யக்கொண்டான் ஆற்றில் கழிவு நீர் கலக்காமல் பணிகளை மேற்கொள்ள உள்ளோம். மழைக் காலத்திற்கு முன்பாக அனைத்து வாய்ககளிலும் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
புதிய சாலை பணிகளை ஆய்வு செய்து அதையும் செய்ய இருக்கிறோம் தொற்று நோய் ஒழிப்பது மட்டும் மட்டுமல்ல அரசு பணி மக்கள் தேவைகளையும் செய்வதும் தான்.
விரைவில் சாலைகள், குடிதண்ணீர் வழங்குவது உள்ளிட்ட அனைத்தையும் செயல்படுத்த உள்ளோம்.
மேலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தனை பணிகளும் ஆய்வு செய்ய உள்ளோம் என எனக் கூறினார்.