போட் நிறுவனம் இந்திய சந்தையில் 330 வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
புதிய நெக்பேண்ட் வயர்லெஸ் ஹெட்செட் ப்ளூடூத் 5.0, 10 எம்எம் டைனமிக் டிரைவர்களை கொண்டிருக்கிறது. இது போட் நிறுவனத்திற்கு உரிய தலைசிறந்த ஆடியோ அனுபவம் மற்றும் மேம்பட்ட பேஸ் வழங்குகிறது.
இந்த ஹெட்போன் கொண்டு ஒரே சமயத்தில் இரு சாதனங்களுடன் பேர் செய்ய முடியும். பின் இரு சாதனங்களிடையே மிக எளிமையாக ஸ்விட்ச் செய்து கொள்ளலாம்.
பட்டனை க்ளிக் செய்து வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவை இயக்க முடியும். சிலிகான் பின்களை கொண்டிருப்பதால், இது சவுகரிய அனுபவத்தை வழங்கும்.
ஒவ்வொரு இயர்பட்களிலும் காந்தம் இருப்பதால், பயன்படுத்தாத சமயங்களில் இரு இயர்பட்களும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும்.
மெட்டல் அலாய், பிரீமியம் பினிஷ் கொண்டிருக்கும் ராக்கர்ஸ் 330 IPX5 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.
இத்துடன் 150 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. இது 30 மணி நேர பேக்கப் வழங்குகிறது. மேலும் ASAP பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இதனால் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்து ஹெட்போனினை பத்து மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும். இது யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டுள்ளது. இதன் விலை ரூபாய்.1299/_