தமிழகத்தில் கொரோனா 2 வது அலை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இருந்தும் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் விதமாக தடுப்பூசி போடும்பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மே 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி போட மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இருப்பினும் தடுப்பூசி தட்டுபாடு காரணமாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடும் பணி தாமதமானது அதையடுத்து தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் தமிழக சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணியை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வைப்பார் என நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்குகிறது.
இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் நாளை தொடங்கி வைக்கிறார் என அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.