கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கரடிசித்தூர், க.அம்பலம், வடக்கநந்தல், எடுத்தவாய்நத்தம், மாதவச்சேரி ஆகிய பகுதிகளில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி, வினோத்குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வெவ்வேறு இடங்களில் சாராயம் விற்பனை செய்த கரடிசித்தூர் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் மனைவி தமிழரசி(வயது 33),
க.அம்பலம் கிராமத்தை சேர்ந்த காசிவேல் மனைவி தெய்வானை(வயது50), வடக்கநந்தல் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மனைவி லட்சுமி(வயது55), எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்த செல்லமுத்து மனைவி செல்வி(வயது42), சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி மகன் மாணிக்கம்(வயது 62) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து தலா 20 லிட்டர் வீதம் 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.