அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆடம்பர வரவேற்பு நிகழ்வுகளைத் தவிர்த்திட வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ”
கொரோனா சூழ்நிலையை எதிர்கொள்ள தமிழக அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கருணை உள்ளத்துடன் பலரும் நிதி உதவியை வழங்கி வருகின்றனர்.
என்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடைகளை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்புகள் தரப்பட்டுள்ளன. தொற்றுக் காலத்தில் இதுபோன்ற வரவேற்பை முழுமையாக தவிர்க்க வேண்டும்.. கட்டுப்பாடுகளை மீறுபவர்களை கண்டிக்க வேண்டும்..
கொரோனா தடுப்பு பணிகளே மிக முக்கியம்.. நாம் நமது செயல்களின் மூலம், மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடிப்போம்.. சாதனைகளின் மூலம் மக்களின் அன்பை பெறுவோம்..” என்று குறிப்பிட்டுள்ளார்.