தங்கம் பறிமுதல்
சார்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 8.65 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.
சார்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 8.65 லட்சம் மதிப்பிலான தங்கம் திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வெள்ளிக்கிழமை திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் விமான நிலைய, சுங்கத்துறை மத்திய வான் நுண்ணறிவுப்பிரிவு அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பெரம்பலூரை சேர்ந்த செந்தில்குமார் (41) என்ற பயணி தனது உடைமைகளுக்குள் கொரடுக்குள் (கட்டிங் பிளேயர்) மறைத்து 178 கிராம் தங்கத்தை எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு 8.65 லட்சம் என கூறப்படுகின்றது.