கொரோனா நோய் தொற்றை தடுக்க ஒவ்வொருவரும் கை கழுவுதல் அவசியம்.
பயிற்சி அளித்த
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்!
கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக ஒவ்வொருவரும் கை கழுவுதல் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் ,கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் வீட்டிலேயே இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
வீட்டில் இருப்பவர்களும் அத்தியாவசிய தேவைக்காக வெளியே சென்று வருபவர்களும் தினசரி 10 முதல் 15 முறை வரை கை சுத்திகரிப்பான் திரவம் அல்லது சோப்பு நீரால் கை கழுவ வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் 20 வினாடிகள் கை கழுவ வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கை கழுவ வேண்டிய அவசியம் குறித்து திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் தலைமை வகித்தார் சமூக ஆர்வலர் சௌந்தரம் கீர்த்தனா விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சமூக தன்னார்வலர் சிபு கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக
கை கழுவும் விதம் குறித்து எடுத்துரைக்கையில், கைகளைத் தண்ணீரில் நன்கு நனைத்த பிறகு கை முழுவதையும் கழுவுமளவு, போதுமான அளவு சோப்பு அல்லது ஹேண்ட் வாஷை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் இரு உள்ளங்கைகளையும் சுத்தம் செய்ய வேண்டும்.
இரு கைகளின் விரல்கள் ஒன்றிணைத்தபடி உள்ளங்கைகளை சேர்த்து நன்கு தேய்க்க வேண்டும். அடுத்ததாக இரு கைகளின் புறங்கைகளையும் நன்றாகத் தேய்க்க வேண்டும். வலது புறங்கையை இடது உள்ளங்கையைக் கொண்டும், பின்னர் இடது புறங்கையை வலது உள்ளங்கை கொண்டும் நன்கு தேய்த்தல் வேண்டும்.
உள்ளங்கை மற்றும் புறங்கை இரண்டையும் நன்கு தேய்த்த பிறகு, இரு கைகளின் விரல்களுக்கு இடையேயானப் பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். விரல்களின் பக்கவாட்டு பகுதியில் சோப்பு நன்கு படும்படி இரு கைகளின் விரல்களையும் ஒன்றோடொன்று சேர்த்துத் தேய்க்க வேண்டும்.
அடுத்தபடியாக இரு கைகளின் விரல் நுனிகளைச் சுத்தப்படுத்தும் விதமாக இரு கைகளின் நுனிப் பகுதிகளையும் நன்கு தேய்க்க வேண்டும். இறுதியாக இரு கைகளின் கட்டைவிரல் பகுதியையும் நன்கு சுத்தப்படுத்த வேண்டும். ஒரு கையின் கட்டைவிரலை மற்றொரு கையின் விரல்களால் தேய்த்துச் சுத்தப்படுத்த வேண்டும்.
அதனையடுத்து கைகளைத் தண்ணீர் விட்டு சுத்தமாகக் கழுவிய பின்னர், நன்கு உலர்ந்த சுத்தமான துணியையோ அல்லது திசு பேப்பரையோ கொண்டு கைகளை உலர்த்த வேண்டும் என்றார்.