திருச்சி விமான நிலையத்தில் ரூ. 1 கோடி
மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்.
திருச்சியில் உடலுக்குள் மறைத்து கடத்த முயன்ற ரூ. 1 கோடி மதிப்பிலான தங்கம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை நள்ளிரவு துபையிலிருந்து சிறப்பு மீட்பு விமானம் ஒன்று திருச்சி வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் இரு பயணிகளின் நடவடிக்கையில் சுங்கத்றைறயினருக்கு சந்தேகம் எழுந்தது. இதனைடுத்து குறிப்பிட்ட அந்த இரு பயணிகளையும் தனியாக அழைத்து மேற்கொண்ட சோதனை மற்றும் விசாரணையில் அவர்கள், சென்னையைச் சேர்ந்த ஆரோன் பாஷா மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சிவா என்பதும், இருவரும் தங்களது உடலுக்குள்ளும் ஆடைகளிலும் , தலா 1.250 கிலோ எடையிலான பசை (பேஸ்ட்) வடிவிலான தங்கத்தை முறைகேடாக மறைத்து கடத்தி வந்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று தங்கத்தை வெளியே எடுக்க சிகிச்சை மேற்கொண்டனர். தொடர்ந்து இருவரிடமிருந்தும் மொத்தம் 2.550 கிராம் தங்கம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ. 1.02 கோடியாகும். இது தொடர்பாக சுங்கத்துறையினர்,
ஆரோன்பாஷா, சிவா ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து தங்கத்தை கொடுத்தனுப்பிய நபர்கள் குறித்து விசாணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.