Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகரில் மாஸ்க் அணியாத 17, 300 பேர் மீது வழக்கு.

0

கொரோனா தடுப்பு அரசு விதிகளை
மீறிய 17,300 மீது வழக்குப் பதிவு.
26 வணிக நிறுவனங்களுக்கு அபராதம்.

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத வகையில் 17,300 பேர் மற்றும் 26 வணிக நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் 20}ஆம் தேதி இரவு 10மணி முதல் அதிகாலை 4 மணி முடிய இரவு நேர பொதுமுடக்கம் அமலில் உள்ளது. அதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக் கிழமைகளில் முழு நேர பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக கொரோனா தடுப்புகள் குறித்து அரசு விதிமுறைகளையும் பின்பற்ற வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு விதிமுறைகளை பின்பற்றாதோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

திருச்சி மாநகர பகுதிகளில் காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில்,

அரசு உத்தரவை மீறி, முகக்கவசம் அணியாத 16,500 பேர் மீதும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காத 800 பேர் மீதும், மற்றும் விதிமுறைகளை பின்பற்றாத 26 வணிக நிறுவனங்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செயல்படுமாறும்,
இரவு நேரங்களில் வீணாக சுற்றித்திரியவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.