திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு தொகுதி சார்பாக, கபசுரகுடிநீரை மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ வழங்கினார் .
திமுக தலைவரின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்டக் கழகம் சார்பாக, திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதியில், சத்திரம் பேருந்து நிலையம் அருகில் இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுழைவு வாயிலில் அருகில்,
கொரோனா தடுப்பு முன் நடவடிக்கை முன்னிட்டு கபசுரகுடிநீரை திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.எம்.எல்.ஏ. தலைமையில் பொது மக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார் .
உடன் திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், பகுதி செயலாளர்கள் மு.மதிவாணன், ஜி. ராஜசேகர், எஸ். பாலமுருகன், மாநில நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், செந்தில், திருச்சி கிழக்கு தொகுதியை சார்ந்துள்ள வட்டக் செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .