Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சர்வதேச விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள உதவி கேட்டு ஏழை மாணவர்கள் திருச்சி கலெக்டரிடம் மனு.

0

திருச்சி மாவட்டம் மணப்பாறை வலசபட்டி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் செல்வம் இவருடைய மகன் S.சரவணகுமார் (தடகள விளையாட்டு வீரர்) இவர் வருகின்ற ஏப்ரல் 27,28 ம் தேதி நேபாளம் நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச தடகள விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதைபோன்று மணப்பாறை தொட்டிபூப்பட்டி கிராமத்தை சேர்ந்த துணிவியாபாரம் செய்து வரும் நல்லுச்சாமி அவருடைய மகன் ந.அருண் இவரும் வருகின்ற ஏப்ரல் 27,28 ம் தேதி நேபாள நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச கபாடி விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளார்.

இவர்களது இருவருடைய குடும்பம் ஏழ்மையான நிலையில் உள்ளதால் இந்த மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள அவர்களுடைய பயண செலுகளுக்காண உதவிதொகை வழங்க வேண்டி திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இவர்கள் இருவரும் கடந்த 2021 மார்ச் மாதம் 25 ம் தேதி கோவா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சர்வேதேச போட்டியில் கலந்து கொள்ள தேர்வானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் சமூக ஆர்வலரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர்.ஏ.தாமஸ்,மணிவேல், பிரவீண் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்*

Leave A Reply

Your email address will not be published.