ஏப்ரல்19
ஆர்யபட்டா கோள் ஏவப்பட்ட நாள்
ஆரியபட்டா (Aryabhata) என்பது இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆகும்.
இப்பெயர் புகழ்பெற்ற இந்திய வானியலாளரான ஆரியபட்டா என்பவரின் நினைவாக இச்செய்கை கோளிற்கு பெயர் சூட்டப்பட்டது.
அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இப்பெயரை தேர்ந்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செயற்கைக்கோள் சோவியத் ஒன்றியத்தால் 1975, ஏப்ரல் 19 இல் கப்புஸ்டீன்யார் என்ற இடத்தில் இருந்து கொஸ்மொஸ்-3எம் என்ற ஏவுகலன் மூலம் செலுத்தப்பட்டது. ஆரியபட்டா இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் வானியல் ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்காக அமைக்கப்பட்டது.
இந்திய வானவியல் ஆராய்ச்சி கழகத்தால் வடிவமைக்கப்பட்டு பெங்களூரில் உருவாக்கப்பட்ட 360 கிலோ எடை கொண்ட இச்செயற்கைக்கோளை சோவியத் ரஷ்யாவின் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. 26 பக்கங்கள் கொண்ட பல்கோண வடிவில் அமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளின் அனைத்து பக்கங்களிலும் சூரிய கதிர்களில் இருந்து மின்சாரத்தை பெறும் மின்கலன்கள் பொருத்தப்பட்டிருந்தன. 5 நாட்களில் பூமியை 60 முறை வெற்றிகரமாக சுற்றி வந்த செயற்கைக்கோள் மின்தடங்களால் செயலிழந்தது.
17 ஆண்டுகளுக்குப் பின் 1992ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் பூமியின் வளி மண்டலத்திற்குள் நுழைந்து எரிந்து சாம்பலானது. பூமியின் காற்று மண்டலத்தில் இது பிப்ரவரி 11, 1992 இல் வந்தது.
ஆர்யபட்டா செயற்கை கோள் கொண்ட 1984 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது.
இச்செயற்கைக்கோள் உருவாக்கத்திற்கென சுமார் மூன்று கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
இதனை உருவாக்க 250 பொறியாளர்கள் 26 மாதங்கள் உழைத்தனர். இச்செயற்கைக் கோள் பூமியிலிருந்து சுமார் 695 கி.மீ.உயரத்தில் அமையுமாறு ஏவப்பட்டது. இது உலகை ஒருமுறை சுற்றிவர 96.6 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. ஒரு நாளைக்கு 15 சுற்றுக்கள் வீதம் உலகைச் சுற்றி வந்தது. இதன் சராசரி வேகம் விநாடிக்கு 8 கி.மீ. ஆகும். இதன் இயக்கம் ஆறு மாதங்கள் மட்டுமே ஆகும்.
விண்வெளியில் செயல்படக்கூடிய செயற்கைக்கோளை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை இந்தியாவிலேயே நிறுவுவது இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவுவது விண்வெளி ஆராய்ச்சிகளில் மேலும் மேலும் முன்னேற்றம் காண்பது ஒட்டுமொத்தமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் முதல் பணி வெற்றிகரமாக காலடி எடுத்து வைப்பது என அறியப்பட்ட நிகழ்வு வெற்றியடைய செய்தது இவை அனைத்தும் முதல் முயற்சியிலேயே வெற்றி கண்டு இந்தியா சாதனை படைத்தது இந்த வெற்றியை தக்க முறையில் நினைவுகூற இந்தியாவும் ரஷ்யாவும் நினைவாக தபால் குறைகளை வெளியிட்டன இந்திய ரிசர்வ் வங்கி இரண்டு ரூபாய் பணத்தை ஆர்யபட்டா செயற்கைக்கோள் படத்தை அச்சடித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
அஞ்சல்தலை சேகரிப்பாளரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான விஜயகுமார் ஏப்ரல் 19 ஆரியபட்டா செயற்கைக் கோள் ஏவப்பட்ட நாள் குறித்து எடுத்துரைத்தார்.