திருச்சியில் பணத் தகராறில் சலூன் கடையை அடித்து நொறுக்கிய வாலிபர்
கைது .
திருச்சி உறையூர் கீழே வாணிப செட்டித் தெருவை சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன்
(வயது 46) இவர் திருச்சி வில்லியம் சாலையில் சலூன் கடை நடத்தி வருகிறார்.இந்தக் கடையை மாத வாடகைக்கு ஒருவரிடம் வாங்கி நடத்திவருகிறார்.
இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக அந்த கடைக்கான வாடகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் வாடகையை தருமாறு உய்யகொண்டான் திருமலை சண்முகா நகரைச் சேர்ந்த மேக்ஸ்கரன் என்பவர் முத்தமிழ்செல்வனிடம் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது அப்போது ஏற்பட்ட தகராறில் மேக்ஸ்கரன் சலூன் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து முத்தமிழ்செல்வன் அளித்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்கு பதிந்து கண்ணாடியை உடைத்ததாக மேக்ஸ் கரன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.