ஒட்டுப்போட பயன்படுத்திய கையுறைகள் ஆங்காங்கே கிடப்பதால் சுகாதார சீர்கேடு அபாயம்
2021 சட்டசபை தேர்தல் காரானா பயத்திலும் நடந்து முடிந்தது. ஒட்டுப்பதிவின் போது காரானா பரவலை தடுக்க, பிளாஸ்டிக் கையுறை, சானி டை சர், வெப்பநிலை பரிசோதனை செய்யும் கருவி என பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன.
வாக்காளர்கள் பலர் பயன்படுத்திய பிளாஸ்டிக் கையுறைகளை குப்பை தொட்டியில் போடவில்லை.
ஒட்டுச்சாவடியிலும், பொது இடங்களிலும் வீசி சென்றனர்.
இப்போது ஒட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கையுறைகள் ஆங்காங்கே கிடப்பதால் சுகாதார சீர்கேடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான ஒட்டுச்சாவடிகள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தான் அமைக்கப்பட்டிருந்தன.
கரோனா காரணமாக கல்வி நிலையங்களில் மாணவர்கள் இல்லாமல் ஆசிரியர்கள் மட்டும் வந்து செல்லுகிறார்கள்.
எனவே மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு ஆங்காங்கே கிடக்கும் பிளாஸ்டிக் கையுறை கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.