மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் .மு.பரஞ்ஜோதி தீவிர பிரச்சாரம்.
அதிமுகவின் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான மு. பரஞ்ஜோதி இன்று No.94 கரியமாணிக்கம் ஊராட்சியில்
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்த பெண்களிடம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் இனி 150 நாட்களாக மாற்றப்படும், மேலும் அதிமுக அறிவித்துள்ள வாக்குறுதிகளை எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
வேட்பாளர் மு.பரஞ்ஜோதி உடன் ஒன்றிய செயலாளர்கள், அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.