திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் போட்டியிடுகிறார்.
நேற்று அவர் பொன்னேரிபுரம் பகுதியில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கி னார். தொடர்ந்து பரமசிவபுரம் தெரு, நாகம்மை வீதி, அன்னை நகர், அந்தோணியார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கொளுத் தும் வெயிலில் நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது தான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது இந்த தொகுதியில் செய்த சாதனைகளில் சிலவற்றை எடுத்துக் கூறி னார்.
நீண்ட காலமாக புதர் மண்டிக்கிடந்த மாவடி குளத்தை சீரமைத்து கொடுத்தது பற்றி வாக்காளர் களிடம் எடுத்து கூறினார். ரூ.2 1/2 கோடி நிதி பெற்று கொடுத்து மாவடி குளத்தை சீரமைத்து அழகுப்படுத்தியது
நூற்றுக்கணக்கான ஏக்கர் பாசன வசதி செய்து கொடுத்தது பற்றி கூறி இந்த சாதனைகளை தொடர தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.
மேலும் கிழக் குச்சியிலிருந்து நத்தமாடிப்பட்டி வரை மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று தார் சாலை அமைத்து கொடுத்ததையும் நினைவு கூர்ந்தார்.
வேட்பாளர் ப.குமார் சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், பூரண கும்ப மரியாதை செய்தும் வரவேற்றனர்.