திருச்சிக்கு தமிழகத்திற்க்கும் பெருமை சேர்க்கும் வகையில் தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டியில் ஒரு தங்கம் நேற்று ( வியாழக்கிழமை) கிடைத்துள்ளது.
பெங்களூரில் கடந்த 24-03-2021 முதல் தொடங்கி 27-03-2021 வரை நடைபெற்று வருகின்ற தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டியில் திருச்சி தடகள விளையாட்டு வீரரும் பயிற்சியாளருமான மணிகண்ட ஆறுமுகம் அவர்களிடம் பயிற்சி பெற்ற
Rockfort Star Acadamey sports club யை சேர்ந்த தடகள விளையாட்டு வீரர் வெங்கடேஷ் 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் தங்கம் வென்று திருச்சிக்கும் தமிழகத்திற்க்கும் பெருமை சேர்த்துள்ளார்.
குண்டு எறிதலில் மகேந்திரன் 4 ம் இடத்தையும் 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் முகயது ஆசிக் 4 ம் இடத்தையும் பிடித்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிந்நுக்கொள்கிறோம்.
மாற்றம் அமைப்பின் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.