காசு பணம் வேண்டாம்
சுகாதாரமான வாழ்க்கையை எங்களுக்கு கொடுங்கள், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீர சக்தியிடம் பொதுமக்கள் வேண்டுகோள்.
கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கூட்டணி வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சியில் கிழக்கு தொகுதி வேட்பாளர் வீரசக்தி வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று நத்தர்ஷா பள்ளிவாசல், குப்பன்குளம், ஜீவா நகர் பகுதிகளில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் வீரசக்தி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வீதி வீதியாக வீடு வீடாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.
அப்போது மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள் கோட்பாடுகளை மக்களிடம் விளக்கி கூறினார்அப்போது பொதுமக்கள் வேட்பாளர் வீர சக்தியிடம் ஒரு வேண்டுகோளை வைத்தனர் எங்களுக்கு காசு பணம் வேண்டாம் எங்கள் பகுதியில் வீடுகளுக்கு மத்தியில் சாக்கடை செல்கிறது சாக்கடையை சீரமைத்து சுகாதாரமான வாழ்க்கையை எங்களுக்கு கொடுங்கள் அது போதும் உங்களுக்கு வாக்களிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
அதை ஏற்றுக் கொண்ட வேட்பாளர் வீரசக்தி நான் வெற்றி பெற்றால் மக்கள் திட்டங்களை செயல்படுத்துவேன், ஆசிரியருக்கு சிறப்பு சீருடை வழங்கப்பட்டு கௌரவமாக நடத்தப்படுவார்கள். லஞ்சம் வாங்காமல் பணியாற்றும் ஊழியர்களை பணி நீட்டிப்பு செய்வோம் தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுப்போம் என்று கூறினார்.
மக்கள் மத்தியில் வேட்பாளர் வீரசக்தி க்கு அமோக ஆதரவு கிடைத்தது சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து ஆதரவு கொடுத்தனர்.
பிரச்சாரத்தின்போது மக்கள் நீதி மய்யம் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.