திருச்சி சங்கிலியாண்டபுரம் கவி ஹாஸ்பிடல், நியூரோ பவுண்டேசன் சார்பில்
சிறப்பு மருத்துவ முகாம்
3 நாட்கள் நடைபெறுகிறது.
திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள கவி ஹாஸ்பிடல், நியூரோ பவுண்டேஷேன் சார்பில் மூளை, நரம்பியல் இலவச மருத்துவ முகாம் கவி ஹாஸ்பிடல் வளாகத்தில் 3 நாட்கள் நடைபெறுகிறது.
மருத்துவ முகாமை மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். ராஜ்பாஸ்கர் இன்று (5-ந்தேதி) துவக்கி வைத்தார்.
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு நீண்டகால தலைவலி, வலிப்புநோய், பக்கவாதம், முகவாதம், கழுத்துவலி, முதுகுவலி, முதுகு தண்டுவடவலி, கால்எரிச்சல், உணர்வற்று போதல் ஆகிய நோய்களுக்கு இலவச ஆலோசனை வழங்கப்பட்டது.
இம்முகாம் சனிக்கிழமை (6-ந்தேதி) மதியம் 3 மணிமுதல் மாலை 6 மணிவரையிலும், 7-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை நடைபெறுகிறது.
முகாமில் மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ்பாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில் :
கவி ஹாஸ்பிடல் விபத்து, அவரச சிகிச்சை மற்றும் தலைகாயம், மூளைகட்டி, முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை, மூட்டுமாற்று, நரம்பியல் அறுவை சிகிச்சை, லேப்ரோஸ்கோப்பி, பொது அறுவைசிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாகும்.
இங்கு உயர்தர தொழில்நுட்பத்துடன் குறைந்த கட்டணத்தில் சேவை மனப்பாண்மையுடன் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இம்மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப்பிரிவு உரிய மருத்துவர்களுடன் 24 மணிநேரமும் செயல்படுகிறது. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சிடி ஸ்கேன் பிரைன் 50சதவீதமும், பிற பரிசோதனைகள் 30 சதவீதம் சிறப்பு சலுகை கட்டணத்தில் செய்யப்படுகிறது என்றார்.
முதல்நாள் மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.