திருச்சி பூலோகநாதர் கோயில் எதிரில் மீன் மார்க்கெட்: கண்டித்து. பிஜேபி மண்டல் தலைவர் ராஜசேகரன் தலைமையில் மனு
திருச்சி கீழப்புலிவார்டு ரோட்டில் உள்ள தமிழ் நாட்டிலேயே சிறந்த வாஸ்து ஸ்தலமான பூலோகநாதர் சாமி கோவில் எதிரில் தற்காலிகமாக மீன் மார்க்கெட் வருவதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் அரிய மங்கலம் கோட்டத்தில் பாலக்கரை மண்டல் தலைவர் ராஜசேகரன் தலைமையில் உதவி ஆணையரிடம் மனு கொடுத்தனர்.
அதில் போர்க்கால அடிப்படையில் இத்திட்டத்திற்கு மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுமாறு மனு கொடுத்தனர்.
வேலை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிகமாக மீன் மார்க்கெட் அமைப்பதைத் நிறுத்தி வைப்பதாக உறுதி கூறி உள்ளனர்
இந்நிகழ்வில் மார்க்கெட் மண்டல் தலைவர் சதீஸ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்திபன், மல்லி செல்வம், தமிழரசி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் வேளாங் கண்ணி, இளைஞர் அணி கோபி, மாரிமுத்து உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.