திருச்சியில் தேசிய மக்கள் நலன் கட்சி உதயம் .
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த செந்தில் தேசிய மக்கள் நலன் கட்சியை இன்று திருச்சியில் தொடங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவில் உள்ள தேசிய கட்சிகள் அனைத்தும் முன்னேற்ற பாதைக்கு எந்த களமும் அமைக்க வில்லை.
எனவே அனைத்து மட்டத்திலுள்ள லஞ்சம், ஊழல்களை ஒழிப்பது. அதற்கு இடர்பாடுகளாக உள்ள சட்டங்களை நீக்குவது. விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கு அதிக நிதியை ஒதுக்குவது உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த,
முன்னேற்றத்திற்கான 20 கொள்கைகளை அடிப்படையாக கொண்டு எனது கட்சி செயல்படும் என்றார்.