Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,513 ஆக உயர்வு

0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,53,992 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,513 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 562 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,37,525 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 3,954 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 225 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2,36,485 ஆக உயர்ந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.