திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை ஐந்து கட்ட பிரசாரத்தை முடித்துள்ளார்.
6-ம் கட்ட பிரசாரத்தை, மார்ச் 8, 9 ஆகிய தேதிகளில் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் 6ஆம் கட்டமாக மேற்கொள்ளும் “உங்கள்தொகுதியில் ஸ்டாலின்” சுற்றுப்பயணத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் மு.க.ஸ்டாலின் தனது 6-ம் கட்ட பிரசாரத்தை மேற்கொள்வார் என்று தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.