Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பத்தாயிரத்தில் ஒருவருக்கு வரக்கூடிய நோயினை குணப்படுத்திய திருச்சி அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள்

0

பத்தாயிரத்தில் ஒருவருக்கு வரக்கூடிய “அகலசியாகார்டியா” அரியவகை நோயை குணப்படுத்திய திருச்சி அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள்

திருச்சி,

வாந்தி மற்றும் குமட்டலினால் ஆறு மாத காலமாக தூக்கமில்லாமல் தவித்து கொண்டிருந்த 57 வயதுடைய செல்லதுரை என்பவர் திருச்சி அப்போலோ மருத்துவமனை குடல் மற்றும் வயிற்று சிறப்பு மருத்துவர் Dr. SNK. செந்தூரனை அனுகினார்.

 

மருத்துவர் நோயாளியை பரிசோதித்ததில், பத்தாயிரத்தில் ஒருவருக்கு வரக்கூடிய “அகலசியாகார்டியா” எனப்படும் அரியவகை நோய் உள்ளதை கண்டறிந்தார்.

“அகலசியாகார்டியா” எனப்படும் நிலையினால் உணவுக்குழாய் மற்றும் உணவுகுழாய்க்கும் வயிற்றிற்கும் இடையே இருக்கும் தசைவால்வு, உணவு விழுங்களின் போது நெகிழ்வுதன்மையை இழந்து விடுகிறது. இதனால் உணவு வயிற்றின் உள்ளே செல்வது தடைபட்டு நெஞ்சுவலி, நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி, பசியின்மை, எடைகுறைவு மற்றும் இரவு வாந்தியினால் தூக்கமின்மை ஏற்படுகிறது.

இப்பிரச்னைக்கு பாரம்பரிய அறுவை சிகிச்சை அல்லது லேபராஸ்கோபி மூலமாகவே தீர்வு என்ற நிலைமாறி, தற்பொழுது எண்டோஸ்கோப்பி மூலம் அதிநவீன POEM (Per Oral Endoscopic Myotomy) என்ற புதிய சிகிச்சையை,
இந்தியாவிலேயே மிக குறைந்த மருத்துவர்களே அளிக்கின்றனர்.
ஓப்பன் அல்லது லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சையில் வயிற்றை கிழித்து சிகிச்சை கொடுக்கப்படும்,

ஆனால் இதற்கு மாறாக என்டோஸ்கோப்பி மூலமாக தழும்பு மற்றும் வலியில்லாத சிகிச்சை, குறைந்த பட்சநாளில் உடல் தேறல் மற்றும் நிரந்தர தீர்வு கிடைக்கிறது. இச்கிச்சை அளிக்க மிகவும் குறைந்த சிறப்பு மருத்துவ நிபுணர்களே நாட்டில் உள்ள நிலையில் திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையை சேர்ந்த குடல், கல்லீரல் மற்றும் வயிறு சிறப்பு மருத்துவர் Dr. SNK. செந்தூரன், மயக்கவியல் மருத்துவநிபுணர் Dr.கார்த்திக் உதவியுடன் திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் முதன் முறையாக இச்சிகிச்சையை வெற்றிகரமாக அளித்தார். சிகிச்சை மூலம் துரித குணமடைந்த நோயாளி மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது ஆறுமாத தூக்க மில்லாத நிலையை கடந்தது மட்டுமின்றி பிடித்த உணவுகளை பயமின்றி அருந்துவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அப்போலோ மருத்துவமனை இதுபோன்ற முதல்முயற்சி மற்றும் கடினமான சிகிச்சைகளை அளிப்பதில் முதன்மையாக இருப்பதில் பெருமை கொள்கிறது, இந்த பட்டியலில் இப் “POEM” சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது எனவும்,

இச்கிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவ குழுவினர்களுக்கு அப்போலோ மருத்துவமனை மதுரை மண்டல தலைமை மருத்துவர் ரோகினிஸ்ரீதர் பாராட்டுகளை தெரிவித்தார். திருச்சி அப்போலோ மருத்துவமனை முதுநிலை பொதுமேலாளர் சாமுவேல், விற்பனைப்பிரிவு பொது மேலாளர் மணிகண்டன், மருத்துவ நிர்வாகி Dr.சிவம் மற்றும் துணைப் பொது மேலாளர் சங்கீத் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.