Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சொந்தம் ஆதரவற்ற பெண்கள் காப்பகத்தில் சார்பில் முப்பெரும் விழா

0

திருச்சி சொந்தம் ஆதரவற்ற பெண்கள் காப்பகத்தின் சார்பில் முப்பெரும் விழா.

https://trichyxpress.com/

திருச்சி சொந்தம் ஆதரவற்ற பெண்கள் காப்பகத்தின் 25 ம் ஆண்டு வெள்ளிவிழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த நிறுவனம் என்ற விருது பெற்ற TMSSS இயக்குனர் Fr.ஜான் செல்வராஜ் அவர்களுக்கு பாராட்டு, சொந்தம் ஆதரவற்ற பெண்கள் காப்பகத்தை சேர்ந்த மணப்பெண் சத்யா மணமகன் அலோசியஸ் ஆகியோரின் திருமண விழா உள்ளிட்ட முப்பெரும் விழா, சமூக ஆர்வலரும் மூத்த வழக்கறிஞருமான மார்ட்டின் தலைமை நடைபெற்றது.

இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக இலவச சட்ட பணி ஆனைக்குழு செயலாளர் மாவட்ட நீதிபதி ஜெயாசிங் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மணமக்களை வாழ்த்தினார்.

சிறப்பு அழைப்பார்களாக சமூக நலத்துறை அதிகாரி தமீமுன் நீஷா, ஶ்ரீரங்கம் சட்டம் ஓழுக்கு உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

TMSSS இயக்குனர் & செயலர் ஜான் செல்வராஜ், பொருளாளர் அருட்தந்தை ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் அருள் மூத்த வழக்கறிஞர் அருள், தாய்வீடு அறக்கட்டளை சிவக்குமார், யுகா தொண்டு நிறுவனம் அல்லிராணி, மாற்றம் அமைப்பு நிறுவனர் தாமஸ், மனநலமருத்துவர் ராஜாராம், TMSSS, ஜஸ்ட்ஸ், அனுதினம் தொண்டு நிறுவனம் திருமதி.அருணா தினகரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக மேரிசுஜா வரவேற்க, முடிவில் ஹேமா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள், சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.