திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட அலுவலத்தில் நடைபெற்றது .
இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ கூட்டத்தில் பேசுகையில்,
மூன்று தொகுதிகளில் நிற்கின்ற வேட்பாளர்கள் அதிக படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் .
கிராமபுரத்தில் வேட்பாளர் பெயர்களை சுவர் விளம்பரம் செய்ய வேண்டும், கழக தலைவர் சொன்னது போல தமிழ் நாட்டில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் .
நிற்பது முத்தமிழ் அறிஞர் தான், நிற்பது உதயசூரியன் சின்னம் தான் என்கிற சிந்தனையோடு கழக நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார் .
மு.க.ஸ்டாலின் 50 ஆண்டுகால பொது வாழ்விற்கு சொந்தக்காரர் அவர் தமிழகத்திற்கு என்ன செய்ய நினைக்கின்றாரோ அதை செய்து முடிக்கின்ற முதல் மாவட்டமாக திருச்சி தெற்கு மாவட்டம் இருக்கும் என்பதை நாம் நிரூபித்திட வேண்டும் .
அதே போல் தேர்தலுக்கு குறைந்த பட்ச நாட்கள் மட்டுமே உள்ளது, எனவே கழக தோழர்கள் கடுமையாக உழைத்திட வேண்டும் என்று எடுத்துரைத்து. உழைப்பது நாமாக இருப்போம், உதிப்பது உதயசூரியனாக இருக்க வேண்டும் என உரையாற்றினார் .
உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன், கவிஞர் சல்மா, கோவிந்தராஜ், செந்தில் மற்றும் ஒன்றிய,பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், ஒன்றிய குழு துணை தலைவர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .