திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில்
பெண்ணின் வயிற்றில் இருந்த
18 கிலோ கட்டி அகற்றி சாதனை
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பிரண்ட்லைன் மருத்துவமனையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிரண்ட்லைன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்
கடந்த மூன்று வருடங்களாக 18 கிலோ எடையுள்ள கட்டியுடன் 40 வயது உள்ள பெண்மணி அவதிப்பட்டு வந்துள்ளார்.
பல மருத்துவமனைகளில் காண்பித்தும் அறுவை சிகிச்சை செய்தால் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று கூறியதால்
திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை மேற்கொண்டார்.
அவரை மருத்துவ நிபுணர் குழு பரிசோதனை செய்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தது. அவருக்கு உள்ள கட்டி கர்ப்பப்பைக்கு வெளியே ஏற்படும் மிகப் பெரிய வகையைச் சேர்ந்தது இந்த கட்டியால் அவருக்கு சிறுநீரகப்பை அழுத்தம், குடல் பகுதியில் அழுத்தம், ரத்தக் குழாய்களில் அழுத்தம் ஏற்பட்டு அதன் பாதிப்புகள் கட்டியின் பின்விளைவாக இருதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பு இருந்தது.
பிறகு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் வரை ஆகும்
ஆனால் நோயாளியின் ஏழ்மை காரணத்தால் உங்களால் முடிந்ததை கொடுங்கள் என நிர்வாக இயக்குனர் ராதா கிருஷ்ணன் கூறி 1.50 லட்சம் மட்டுமே பெற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.