யு.கே.ஆர். புரமோட்டர்ஸ் 2ஆம் ஆண்டு துவக்க விழா.
யு கே ஆர் புரமோட்டர்ஸ் இரண்டாவது கிளையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நவல்பட்டு அண்ணா நகர் ஹவுசிங் போர்டு காலனி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ஜே கே சி அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் பா. ஜான் ராஜ்குமார், மாநில சட்ட ஆலோசகர் சி.பி ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். யு.கே.ஆர். புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ். ரஞ்சித் குமார் முன்னிலை வகித்தார்.
மேலும் சேவியர்,மனோகர், டோமினிக், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடியிருப்பு நல சங்க தலைவர் கோவிந்தராஜ்,, தமிழ்செல்வன், பள்ளி தலைமை ஆசிரியை வசந்தா மல்லிகா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சியினை பேராசிரியர் அருள் தொகுத்து வழங்கினார்.
நிர்வாக இயக்குனர்கள் ரவி, மதன், கமல், ஆனந்தராஜ், ரெஜினா, நூர்ஜகான், காலிக் பாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான
ஏற்பாடுகளை அண்ணாநகர் கிளை நிர்வாகிகள் பிரசாத், சார்லஸ், ஆரோக்கியநாதன், கரோலின், பாத்திமா ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
முடிவில் கிளை மேலாளர் ஜாஸ்மின் விமலா நன்றி கூறினார்.