திருவெறும்பூர் அருகே எழில்நகரில் வசிப்பவர் ரவிக்குமாரின் மனைவி பிரியாலட்சுமி (வயது 31).
இவர் நேற்று முன்தினம் மொபட்டில் பெல் பாரத்பாலம் அருகே குழந்தைகளுடன் சென்ற போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பிரியா லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார்.
உடனே அவர், இதுபற்றி பெல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அந்த வாலிபரை தேடி வந்தனர்.
இதற்கிடையே பிரியாலட்சுமியிடம் சங்கிலியை பறித்துச்சென்ற வாலிபர் சம்பவ இடத்தில் இருந்து சுமார் 1½ கிலோமீட்டர் தொலைவில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததும், அவரை அப்பகுதியினர் ஆஸ்பத்திரியில் சேர்த்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர் துவாக்குடி வடக்கு தெருவை சேர்ந்த செல்வக்குமார் (வயது 20) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நகையை மீட்டனர்.