பாரதீய ஜனதா இடம்பெறும் கூட்டணிக்கே எங்கள் ஓட்டு
திருச்சி தேவேந்திரகுல வேளாளர் சங்கம் முடிவு.
உடம்பன், காலாடி, பண்ணாடி, வாதிரியார், பள்ளர் உள்ளிட்ட ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்
திருச்சி தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் சார்பில் கட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் நேற்று கொண்டாடப்பட்டது.
முன்னதாக அதன் தலைவர் பாச.ராஜேந்திரன் தலைமையில் திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் செயலாளர் சங்கர், துணை தலைவர் ஐயப்பன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து தலைவர் ராஜேந்திரன் கூறுகையில்,’40 ஆண்டு கால தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் கோரிக்கையை ஏற்று அதனை பரிசீலித்து நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடி, பரிந்துரை செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி இடம்பெறும் கூட்டணிக்கு எங்களது ஒட்டுமொத்த வாக்குகளையும் போடுவது என முடிவு செய்துள்ளோம்.
தேவேந்திரகுல வேளாளர்கள் தமிழகம் முழுவதும் 1¼ கோடி மக்கள் உள்ளனர்’ என்றார்.