திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்றது.
இந்நிலையில் கம்பரசம்பேட்டை பெரியார் நகர் பகுதியில் சாலை விரிவாக்க பணியின் போது அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் பைப் உடைந்து கடந்த 5 நாட்களாக சரி செய்யப்படாமல் இருந்து வந்துள்ளது.
குடிநீர் பைப்பை சரிசெய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை பஞ்சாயத்து அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துள்ளனர்.
இதனை கண்டித்து இன்று காலை திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையை மறித்து காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் கிராம நிர்வாக அலுவலர் அனுப்பிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.