Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்த வாரப் (பிப்ரவரி 12 – பிப்ரவரி 18) பலன்கள்

0

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (பிப்ரவரி 12 – பிப்ரவரி 18) பலன்கள் மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
பொருளாதாரம் ஏற்ற இறக்கமாக இருந்தாலும், உங்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். தடைகள் பல கடந்து உங்கள் செயல்களில் வெற்றி பெறுவீர்கள். சுப காரியங்கள் இல்லங்களில் நடந்தேறும்.
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் உரிய நேரத்தில் உதவி செய்யமாட்டார்கள். அலுவலக வேலைகளை பதற்றப்படாமல் செய்யவும். வியாபாரிகளுக்கு சக கூட்டாளிகளிடம் எச்சரிக்கை தேவை.புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கு பாடுபடுவீர்கள். விவசாயிகளுக்கு பழைய கடன்கள் வசூலாகும். புதிய மாற்றம் தென்படும்.
அரசியல்வாதிகள் அனைவரின் பாராட்டையும் பெறும்படியான பிரமிக்கத்தக்க காரியங்களைச் செய்வீர்கள். கலைத்துறையினர் தாங்கள் செலவு செய்யும் நேரத்தில் கவனம் தேவை. சக கலைஞர்கள் மூலம் வாய்ப்புகள் கிடைக்கும்.
பெண்மணிகள் குடும்பத்தில் மகிழ்ச்சிகள் சூழ வலம் வருவீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மாணவமணிகள் வருங்காலத்திற்காகச் செய்யும் பயிற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தேடித் தரும்.
பரிகாரம்: ஸ்ரீநரசிம்மரை வணங்கி வரவும்.
அனுகூலமான தினங்கள்: 12,13.
சந்திராஷ்டமம்: இல்லை.
******
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
எதிர்வரும் இன்னல்களைத் தகர்த்தெறிந்து விடுவீர்கள். குடும்பத்தில் சற்று கலகங்கள், குழப்பங்கள் நிலவும். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் ஏற்படும். சமுதாயத்தில் உங்களின் கௌரவம் தலைதூக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் உதவ முன் வருவார்கள். அவர்களைச் சரியாக உபயோகப்படுத்திக் கொள்ளவும். வியாபாரிகளுக்கு உழைப்பிற்குத் தகுந்த பலன் இருக்காது. பிரச்னைகள் தலை தூக்கும். அதற்குத் தீர்வு காண முயற்சிப்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுக்க நினைப்பீர்கள். விவசாயக் கூலிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழுமென்பதால் சற்று கவனம் தேவை. கலைத்துறையினருக்கு பண வரவு திருப்திகரமாக இல்லாமலிருப்பதால் செலவுகளைப் பார்த்து செய்யவும். சக கலைஞர்களின் உதவியால் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவிடும்.
பெண்மணிகள் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். குடும்பத்தினரையும் அன்பினால் ஆட்கொள்ளுங்கள். மாணவமணிகள் கடுமையாக உழைத்து நல்ல மதிப்பெண்களைப் பெறப் பாடுபடுவீர்கள்.
பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 12,14.
சந்திராஷ்டமம்: இல்லை.
******
மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
வெளியிலிருந்து இனிய செய்திகள் வந்து சேரும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக காலம் கழிப்பீர்கள். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடும். பெற்றோரின் உடல் நலம் பேணவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகம் தொடர்பாக வெளியூர் செல்ல நேரிடும் . உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படாது. புதிய வழிகளில் வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்வீர்கள். விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்வதன் மூலம் லாபம் உயரும். நீர்வரத்து அதிகரிப்பால் மகசூல் பெருகும்.
அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் சற்று சிரமங்களை எதிர்கொள்வீர்கள். தொண்டர்களை அரவணைத்துச் செல்லுங்கள். கலைத்துறையினருக்கு பண வரவு மந்தமாக இருக்கும். ஆதலால் சிக்கனமாக செலவழிப்பதில் கவனம் கொள்ளுங்கள்.
பெண்மணிகள் கணவரிடமும், உறவினர்களிடம் சுமுகமாக நடந்து கொள்வீர்கள். மாணவமணிகள் மிகுந்த சிரத்தையுடன் படிப்பீர்கள். அதற்குத் தக்க மதிப்பெண்களையும் பெறுவீர்கள்.
பரிகாரம்: சனீஸ்வர பகவானை வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 13,14.
சந்திராஷ்டமம்: இல்லை.
******
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்துவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். உறவினர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வீண் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் உங்கள் வேலைகளை முடிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக இருக்கவும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களைக் கனிவுடன் நடத்துவார்கள். வியாபாரிகளைத் தேடி வர வேண்டிய பணம் சற்று தாமதமாகும். எவருக்கும் தொழிலில் பங்கு தராமல் தனித்தே செய்வது உத்தமம். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். நல்ல வருமானம் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். அதனால் அதிக கவனத்துடன் செயல்படவும். கலைத்துறையினர் பண வரவைப் பெறுவதில் தாமதம் ஏற்படாது. புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதில் சற்று சிக்கல்கள் ஏற்பட்டு, பின்பு சக கலைஞர்களின் ஒத்துழைப்பால் கைக்கு கிட்டும்.
பெண்மணிகள் குடும்பத்தில் மழலைச் சப்தம் கேட்பதற்கு வாய்ப்பு உண்டாகும். மாணவமணிகள் கல்வியில் அதிக நாட்டம் கொண்டு கடுமையாக உழைக்க வேண்டும்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 14,16.
சந்திராஷ்டமம்: 12, 13.
******
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)
ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்படும். உங்களின் பொறுப்புணர்ந்து கடமைகளை ஆற்றுவீர்கள். பொருளாதார நிலை மேன்மை அடையும். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகளும் கைக்கு வரும்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்திருந்த ஊதிய உயர்வு சற்று தாமதத்திற்குப் பின் கிடைக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் வியாபாரத்தை மேற்கொள்வீர்கள. உழைப்புக்கு ஏற்ற லாபம் பெறுவீர்கள். விவசாயிகள் கூலி வேலையாட்களை கனிவுடன் நடத்துவீர்கள். மகசூல் பெருகும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் புதிய பதவிகளுக்காக தங்களது பெயர் பரிந்துரைக்கப்படும். கலைத்துறையினருக்கு ரசிகர் மன்றங்களினால் நிறைய செலவுகள் ஏற்படும். திறமைக்குத் தகுந்த வாய்ப்புகள் தங்களைத் தேடி வரும்.
பெண்மணிகள் அனைத்துப் பிரச்னைகளையும் சுமுகமாக தீர்க்கப் பழகிக் கொள்வீர்கள். மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஆதரவு நன்றாகவே இருக்கும். கவனமாகப் படிப்பதினால் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும்.
பரிகாரம்: நந்தீஸ்வரரை பிரதோஷ காலத்தில் வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 12, 17.
சந்திராஷ்டமம்: 14,15,16.
******
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
இதுவரை தடைபட்டு வந்த காரியங்கள் விலகி சுமுகமான சூழல் உருவாகும். புதிய வீடு வாங்கும் முயற்சிகளில் ஜெயம் உண்டாகும். வாராக் கடன் வசூலாகும். உற்றார் உறவினர்களின் உதவிகளைப் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் உதவியால் அனைத்தும் சுமுகமாக நடந்தேறும். விட்டுக் கொடுத்து செயல் படுவீர்கள். வியாபாரிகள் புதிய கடன் வாங்கி வியாபாரத்தைப் பெருக்கி லாபமடைவீர்கள். பழைய கடன்களும் அடைந்துவிடும். விவசாயிகளின் கையிருப்புப் பொருட்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். தானிய உற்பத்தி மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தில் சற்று கவனமாக நடந்து கொள்ளுங்கள். தொண்டர்களிடம் உங்கள் செல்வாக்கு உயரும். கலைத்துறையினர் நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். எதிர்வரும் இடையூறுகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள்.
பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு நடந்து கொள்ள முயற்சிப்பீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். மாணவமணிகள் விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.
பரிகாரம்: ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளை வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 15, 16.
சந்திராஷ்டமம்: 17, 18.
******
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
தேக ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும். சோதனைகள் மறையும். அலைச்சல்கள் குறையும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும்.
மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் லாபம் காண்பீர்கள். வியாபாரத்தைப் பெருக்க கடன் வாங்கி விரிவு படுத்தாதீர்கள். சிக்கல் உண்டாகும். விவசாயிகள் கழனிகளை வாங்கும் முயற்சிகள் வெற்றி பெறும். அதிகமாக உழைத்து நல்ல லாபமீட்டுவீர்கள்.
அரசியல்வாதிகளின் புகழும், செல்வாக்கும் உயரும். மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் முயற்சியால் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவீர்கள்.
பெண்மணிகள் உறவினர்களிடம் சற்று வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. செலவுகளைச் சமாளிப்பீர்கள். வருமானம் படிப்படியாக உயரும். மாணவமணிகள் விளையாடும் போது கவனம் கொள்ளவும். படிப்பில் அலட்சியம் கூடாது.
பரிகாரம்: பார்வதி தேவியை வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 13,18.
சந்திராஷ்டமம்: இல்லை.
******
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஒத்துழைப்பு மேலோங்கும். உங்களின் விடாமுயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வாகனங்களை பழுது பார்க்கும் வகையில் செலவு ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள் பண வரவுடன் உயர் பதவிகள் உங்களைத் தேடி வரும். மேலதிகாரிகளின் கெடுபிடிகளிலிருந்து, விடுபடுவீர்கள். வியாபாரிகள் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். தேவைக்கேற்ற சரக்குகளை வாங்கி விற்பனை செய்வீர்கள். விவசாயிகளின் விளை பொருள்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். மகசூல் பெருகும்.
அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள் தொண்டர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள்.கலைத்துறையினர் அனைத்து வேலைகளையும் நேர்த்தியாக முடிப்பீர்கள். எதிர்வரும் இடையூறுகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். பெண்மணிகள் பொறுமையுடனும், பொறுப்புடனும் நடந்து கொண்டு தங்கள் வேலைகளை முடிப்பீர்கள். மாணவமணிகள் மனதை ஒரு நிலைப்படுத்தி கல்வியில் கவனம் செலுத்தினால் உரிய மதிப்பெண்கள் கிடைக்கும்.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகப் பெருமானை வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 14,17.
சந்திராஷ்டமம்: இல்லை.
******
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாகவே இருக்கும் செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். ஜாக்கிரதையாக இருக்கவும். வழக்குகள் சாதகமாக அமையாது. எவருக்கும் முன் ஜாமீன் போட வேண்டாம்.
உத்தியோகஸ்தர்களின் மேலதிகாரிகளும், சக ஊழியர்களும் மிகுந்த அன்புடன் பழகுவார்கள். கோரிக்கைகள் நிறைவேறும்.
வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். லாபம் பெருகும். விவசாயிகளுக்கு சொத்துத் தகராறு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. திட்டமிட்ட பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும்.
அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்மணிகள் உங்களின் செயல்பாடுகளை அனைவரும் பாராட்டுவார்கள். மாணவமணிகள் விடியற்காலை நேரத்தில் எழுந்து பாடங்களை மனப்பாடம் செய்தால் நினைத்த மதிப்பெண்களைப் பெறலாம்.
பரிகாரம்: குரு தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 17,18.
சந்திராஷ்டமம்: இல்லை.
******
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
எடுத்த காரியங்கள் அனைத்தையும் குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பீர்கள். வீடு மாற்றம் செய்கின்றவர்கள் அதற்கான முயற்சியில் இறங்கலாம். பணப்புழக்கம் சரளமாக இருக்காது. எனவே புதிய கடனை வாங்க நேரிடலாம்.
உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் சற்று வேலைப்பளு குறையும். வியாபாரிகள் கூட்டுத் தொழில் மேற்கொள்ளாது தனித்தே தொழிலில் ஈடுபடுவது உத்தமம். விவசாயிகள் கால்நடைகளால் அதிக பலன் பெறுவீர்கள். மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது. தொண்டர்களை அரவணைத்து பிரசாரத்தை மேற்கொள்ளவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பயணங்களால் லாபம் உண்டாகும்.
பெண்மணிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்து உயரும். புதிய லாபகரமான சேமிப்புத் திட்டங்களில் பார்த்து கவனமுடன் சேரவும். மாணவமணிகள் கல்வியில் கூடுதல் அக்கறை தேவை. உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம்: சிவ பெருமானை வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 16,18.
சந்திராஷ்டமம்: இல்லை.
******
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
நல்லவர்களின் நட்பால் புதிய பலம் பெறுவீர்கள். பணவரவு குறையும். செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். அடுத்தவர்களுக்காக மொத்தமும் நீங்களே செலவு செய்யும்படி நேரிடும். மன உளைச்சலுக்கும் ஆளாவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் கவனமாகச் செயல்களைச் செய்யவும். உங்களின் முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய கடைகளைத் திறக்க முயற்சி செய்வீர்கள். தாங்களே முன்நின்று நடத்தினால் வியாபாரம் பெருகி நல்ல லாபம் உண்டாவதற்கு வாய்ப்புகள் உருவாகும். விவசாயிகள் குத்தகை பாக்கிகளை திருப்பிச் செலுத்துவீர்கள். கூடுதல் விளைச்சலைக் காண்பீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொண்டர்களை அரவணைத்துச் செல்லுங்கள். கலைத்துறையினருக்கு பொருளாதார நிலை சீர்படும். சில ஒப்பந்தங்கள் சக கலைஞர்களால் கையெழுத்தாகும்.
பெண்மணிகளுக்கு ஆடை அணிகலன்கள் சேர்க்கை இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் போன்றவை உண்டாகும். மாணவமணிகளின் முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் நீங்கள்தான் ஜெயிப்பீர்கள். வேக நடை பயிற்சியை அவசியம் மேற்கொள்ளுங்கள்.
பரிகாரம்: குலதெய்வ பிரார்த்தனை அவசியம்.
அனுகூலமான தினங்கள்: 13,18.
சந்திராஷ்டமம்: இல்லை.
******
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
ஆன்மிக ஆற்றல் அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களைக் கண்டு கொள்ளாதீர்கள். சமயோஜித புத்தியுடன் காரியமாற்றுவீர்கள். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். திடீர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொண்டால் மேலும் நன்மை அடையலாம். ஊதிய உயர்வும், விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்தி பொருள்களின் விற்பனையைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் சந்தையில் நிலவும் போட்டி, பொறாமைகளைச் சந்திப்பீர்கள். வருமானம் பெருகும்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடம் தங்களைப் பாராட்டும்படி நடந்து கொள்ளுங்கள். கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர நினைக்க வேண்டாம். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தகளைப் பெறுவீர்கள். கலைக் குடும்பத்தினரின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.
பெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் பெற்றோர், ஆசிரியர் சொற்கேட்டு நடந்தால் உங்களின் கோரிக்கைகளை அவர்கள் உடனுக்குடன் நிறைவேற்றுவார்கள்.
பரிகாரம்: பிள்ளையார்பட்டி விநாயகரை வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 17,18.
சந்திராஷ்டமம்: இல்லை.

Leave A Reply

Your email address will not be published.