Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சிக்கிமில் இன்று அதிகாலை நிலநடுக்கம். 4.0 ரிக்டர் பதிவு.

0

சிக்கிமில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.

நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் எல்லையையொட்டிய பகுதி அருகே சிக்கிமில் இன்று காலை 3.43 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.

இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதனால் ஏற்பட்ட இழப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

சிக்கிமில் யுக்சம் நகரம் அருகே நேற்று காலை 10.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.8 ஆக பதிவாகி இருந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை மீண்டும் மற்றொரு நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.