கிறிஸ்துவ வன்னியரை மிக பிற்பட்ட பட்டியலில் சேர்க்க கோரிக்கை.
கிறிஸ்துவ வன்னியர் சங்கம் தீர்மானம்.
திருச்சியில் கிறிஸ்துவ வன்னியர் சங்க ஆலோசனைகூட்டம் அஜந்தா ஹோட்டலில் மருத்துவர் விஜயன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சாதி அடிப்படையில் வன்னியர்களான கிறிஸ்துவர் மத அடிப்படையில் பிற்பட்டோர் பட்டியலில் இருப்பதை நீக்கி மிக பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்,
இந்து வன்னியர்கள் 1994ல் பெற்ற சலுகையினை கிறிஸ்துவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக மறுப்பதை வன்மையாக கண்டித்து, கிறிஸ்துவ வன்னியர்களையும் மிக பிற்பட்டோர் பட்டயவில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் இருதய சாமி ஜான்சன்,ஜோசப் விக்டர், ஜோசப்ராஜ், ஜஸ்டின், வேளாங்கனி, சாலமன்,ஆரோக்கியராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவ வன்னியர்களும் கலந்து கொண்டனர்