பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் அல்லித்துறையில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அருகில் முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், கே.கே. பாலசுப்ரமணியன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொன்.செல்வராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட பொருளாளர் சேவியர், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், நடராஜ், மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் ராஜரத்தினம், ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்தி ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு பின்பு அப் அப்பகுதியில் உள்ள ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.