திருச்சியில் அரசு போக்குவரத்து கூட்டு நடவடிக்கை குழு உண்ணாவிரதம்.
அரசு போக்குவரத்து கழகத்தில் ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க வலியுறுத்தி
பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் தீர்வு எட்டப்படாததை கண்டித்தும் ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க வலியுறுத்தியும்
அரசு போக்குவரத்து கழக சிஐடியு, எல்பிஎப் மற்றும் கூட்டு நடவடிக்கை குழு சங்கங்கள் சார்பில் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு சிஐடியூ மாநில உதவித் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.
உண்ணாவிரதத்தை சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் துவக்கி வைத்தார். இதில் சங்க நிர்வாகிகள் கோபிநாதன், சச்சிதானந்தம், பெருமாள், நாகராஜ், அருள்தாஸ், கணேசன், முத்துவேல், கருணாநிதி, விவேகானந்தன் ஆகியோர் பேசினர். உண்ணாவிரதப் போராட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.