திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் கவி மருத்துவமனை மற்றும் நீரோ அறக்கட்டளை திறப்பு விழா.
திருச்சி சங்கிலியாண்டபுரம் கவி உயர்தர பல்நோக்கு மருத்துவமனை மற்றும் நீரோ அறக்கட்டளையின் திறப்பு விழா நிகழ்ச்சி கவி குரூப் ஆப் கம்பெனியின் உரிமையாளர் சந்திரபாபு தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தஞ்சையை சேர்ந்த பிரபல தோல் மருத்துவர் மாணிக்க வாசகம், டாக்டர் குமரகுருபரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் மருத்துவமனை டாக்டர்கள் ரமேஷ் வைரவன், ராஜ் பாஸ்கர், சுஜிதா சந்திரபாபு, மற்றும் சிவகுமார்,அருண் ரமேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மருத்துவமனை இயக்குனர் சந்திரபாபு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் புதியதாக தொடங்கி உள்ள கவி உயர்தர பல்நோக்கு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளது. மேலும் இந்த மருத்துவமனை முழுக்க முழுக்க சேவை மனப்பான்மையுடன் தொடங்கப்பட்டுள்ளது. கஷ்டப்படும் பொதுமக்களுக்கு இலவசமாகவும் மருத்துவம் செய்யப்படும். 24 மணி நேர விபத்து அவசர சிகிச்சை பிரிவு சிறப்பாக செயல்பட உள்ளது.
இந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 138 பேர் சிகிச்சை பெற்று நலமாக வீடு திரும்பினர்.
இந்த கொரோனா வார்டில் பணிபுரிந்த அனைத்து செவிலியர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டி உள்ளோம்.
திருச்சி சங்கிலியாண்டபுரம் குமரன் ரோட்டில் அமைந்துள்ள கவி உயர்தர பல்நோக்கு மருத்துவமனை மற்றும் நீரோ அறக்கட்டளை 24 மணி நேரமும் மக்கள் சேவையில் சிறப்பாக செயல்பட உள்ளது என கூறினார்.
முடிவில் டாக்டர் சுஜிதா சந்திரபாபு நன்றி கூறினார்.