திருச்சியில் அ.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக தொண்டர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் கடந்த 1965–ம் ஆண்டில் நடந்த போராட்டத்தின் போது ஏராளமானவர்கள் உயிர் இழந்தனர்.
தமிழ் மொழிக்காக தீக்குளித்து இறந்த கீழப்பழூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள் திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் உள்ளன.
இந்த நினைவிடங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25–ந்தேதியை மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாளாக அ.தி.மு.க, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அனுசரித்து வருகின்றன.
இந்த மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தையொட்டி அ.தி.மு.க.வினர் இன்று திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகில் கூடினார்கள்.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலத்துக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகரன், பரமேஸ்வரி முருகன், முன்னாள் அமைச்சர்கள் சிவபதி உள்பட ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தை அடைந்ததும் அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில்
மாவட்ட மாணவரணி செயலாளர்கள் கார்த்திகேயன், T.அறிவழகன் , அழகர்சாமி, மாநில எம். ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் சேவியர் ,வடக்கு மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், தெற்கு மாவட்ட பேரவை செயலாளர் டி.டி.கிருஷ்ணன், மாநகர் மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின், துணைச் செயலாளர் வனிதா, பொருளாளர் மனோகரன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ராஜ்குமார், பேரவை செயலாளர் வி.பத்மநாதன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், மகளிரணி தமிழரசி சுப்பையா, நசீமா பாரிக், பாசறை செயலாளர் இலியாஸ், கலைப்பிரிவு செயலாளர் அழகரசன் விஜய், வர்த்தகர் பிரிவு ஜோசப் ஜெரால்டு, மீனவர் அணி அப்பாஸ், ராமச்சந்திரன், , பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா, நாகநாதர் பாண்டி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, ஏர்போர்ட் விஜி, ஜவஹர்லால் நேரு, டாக்டர் சுப்பையா,மல்லிகா செல்வராஜ், வக்கீல்கள் கங்கைச் செல்வன், சுரேஷ், ராஜா, வரகனேரி சசிக்குமார், காசிப்பாளையம் சுரேஷ், தர்கா காஜா, அஸ்வினி மோகன், நவசக்தி சண்முகம், லயன் கார்த்தி கேயன், அகிலாண்டேஸ்வரி, செந்தில்நாதன், வெல்கம் மாணிக்கம், பொன். அகிலாண்டம், சந்திரன், கட்பீஸ் ரமேஷ், பாபு, மகாலட்சுமி மலையப்பன், அக்தர் பெருமாள், வக்கீல் ஜெயஸ்ரீ, ராஜலட்சுமி, செந்தண்ணீர்புரம் கணேசன், கே.சி.மோகன், சந்திரசேகர், பிரகதீஷ், சந்துரு, ஆட்டோ ரஜினி, காஜாப்பேட்டை சரவணன், ரமணிலால், என்ஜீனியர் ராஜா, ஒத்தக்கடை மகேந்திரன், எம்.ஜே.பி.வெஸ்லி, குரு மூர்த்தி, ஆனந்த்பாபு, புத்தூர் சதீஷ் குமார், சந்திரசேகர், அப்பாக்குட்டி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.